
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பான இடம் என்பதை குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: பிரகாஷ்
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பான இடம் என்பதை குடியிருப்பாளர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இதனை வலியுறுத்தினார்.
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பைத் தொடர்ந்து 111 பேர் காயமடைந்து நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதனால் மிகப் பெரிய பேரழிவை தந்துள்ள புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பானது என்பதை குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்த தற்போதைய விசாரணை முழுமையானதாக இருக்க வேண்டும்.
எரிவாயு குழாய்களுக்கு அருகில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பை மறு மதிப்பீடு செய்வதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
இந்த இடம் பாதுகாப்பானது என்பதை அரசாங்கம் உறுதிசெய்து, நிலைமையை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
அந்தப் பகுதி இப்போது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் அவருக்கு உறுதியளித்திருந்தாலும்,
கடந்த சில நாட்களாக அவர்கள் அனுபவித்ததைத் தொடர்ந்து, நிபுணர்களிடமிருந்து மேலும் உறுதிமொழிகளைப் பெறுவதற்கு குடியிருப்பாளர்கள் தகுதியானவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 10:48 am
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து: யார் பொறுப்பு?
April 4, 2025, 10:46 am
எரிவாயு குழாய் தீ விபத்தால் மசிமோ ரொட்டிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது
April 4, 2025, 10:11 am
ஜூலை மாதத்தில் ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம்: சிஐஎம்பி வங்கி
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
April 3, 2025, 4:35 pm