
செய்திகள் மலேசியா
பத்திரிகையாளர்கள் தங்கள் பேனாக்களின் சக்தியுடனும் சார்பற்ற குரலுடனும் எழுத வேண்டும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
சென்னை:
பத்திரிகையாளர்கள் தங்கள் பேனாக்களின் சக்தியுடனும் சார்பற்ற குரலுடனும் எழுத வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
சென்னை ஒய்எம்சிஏ வேப்பேரியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தேசிய செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டேன்.
அதே வேளையில் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுவதுடன் பத்திரிகையாளர் குரல் விருதைப் பெறவும் அழைக்கப்பட்டதை நான் மிகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்.
அதிமுக பிரச்சார செயலாளர் கௌதமி விளக்கேற்றலுடன் இந்த நிகச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது பாராட்டுகள். மேலும் தேசத்தையும் உலகையும் வடிவமைப்பதில் கருவிகளாக இருந்ததற்காக உங்களுக்கு நன்றி.
சங்கிலியை உடைத்து பத்திரிக்கையாளர்கள் மிகப் பெரிய மாற்றமாக இருக்க வேண்டும்.
பத்திரிகையாளர்கள் தங்கள் பேனாக்களின் சக்தியுடனும், பயம் அல்லது சார்பற்ற குரலுடனும் எழுத வேண்டும். உண்மையை அம்பலப்படுத்தும் கருவிகளாக இருங்கள். மற்றவர்களின் கருவிகளாக அல்ல.
உங்கள் உண்மையான ஆற்றல்களை உணராமல் தடைகளை ஏற்காதீர்கள். மிரட்டல்கள் உங்களை ஒருபோதும் மௌனமாக்க விடாதீர்கள்.
பத்திரிகைத் துறை சமூகத்தின் கண்ணாடி. எனவே அது நேர்மை, தைரியம் மற்றும் சத்தியத்தைத் தளராத நாட்டத்தை பிரதிபலிக்கட்டும்.
மேலும் இந்த கௌரவத்திற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷுக்கு நன்றி என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 11:17 am
தேசிய, மாநில அளவிலான இந்து அறநிலை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மலேசிய இந்து இளைஞர் பேரவை
April 4, 2025, 10:48 am
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து: யார் பொறுப்பு?
April 4, 2025, 10:46 am
எரிவாயு குழாய் தீ விபத்தால் மசிமோ ரொட்டிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது
April 4, 2025, 10:11 am
ஜூலை மாதத்தில் ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம்: சிஐஎம்பி வங்கி
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm