நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுடின் இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர் அம்பாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

சிலாங்கூரின் கீழ் உள்ள ஒரு மருத்துவமனையான அம்பாங் மருத்துவமனையில் இன்று காலை நிலவரப்படி,

ஒரே ஒரு நோயாளி மட்டுமே ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும், என்று அவர் கூறினார்.

சைபர்ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளிகள் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதை  சைபர்ஜெயா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஷாஹாபுதீன் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset