நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுக்கு எதிராக மலேசியா பதிலடி வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும்: அம்னோ இளைஞர் பிரிவு செயலாளர் ஹஃபிஸ் அரிஃபின் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவுக்கு எதிராக மலேசியா தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆக, மலேசியா அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த ஹஃபிஸ் அரிஃபின் கூறினார் 

மலேசியாவுக்கு உலக வர்த்தக அமைப்பின் கீழ் உரிமை உள்ளது. அந்த உரிமையைக் கொண்டு அமெரிக்காவுக்கு எதிராக மலேசியா நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார் 

நாட்டின் கௌரவமும் இறையாண்மையும் அவசியம். ஆதலால், பேச்சுவார்த்தையில் தோல்வி கண்டால் மலேசியா கடுமையான நடவடிக்கையை விதிக்க வேண்டும் 

இதில் தயக்கம் காட்டக்கூடாது என்று ஹாஃபிஸ் கூறினார். மலேசியா ஒரு சுதந்திரமான நாடாகும். அனைத்து நாடுகளையும் வரவேற்போம், மதிப்போம் என்று அவர் சொன்னார் 

முன்னதாக, அமெரிக்கா மலேசியாவுக்கு எதிராக 24 விழுக்காடு வரியை விதிப்பை அறிவித்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset