நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத ஆலயம் தொடர்பான முகநூல் குழு  நிர்வாகிகளிடம் எம்சிஎம்சி வாக்குமூலம் பதிவு செய்தது

சைபர்ஜெயா:

தேசிய அளவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்து கோயில்களைக் கண்டுபிடிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு முகநூல் குழுவின் இரண்டு முக்கிய நிர்வாகிகளிடம் எம்சிஎம்சி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

எம்சிஎம்சி எனப்படு ம்மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இதனை ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய இன, மத முரண்பாடுகளைத் தூண்டும் என்று நம்பப்படும் தகவல்களைப் பரப்புவதற்கு இந்தக் குழு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து கடந்த மார்ச் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு சைபர்ஜெயாவில் உள்ள தலைமையகத்தில் தனிநபர்களின் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டது.

ஆதாரமாக ஒருகைத்தொலைபேசி, சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன.

முகநூல் குழுவிலிருந்து இனவெறியைத் தூண்டும் உள்ளடக்கத்தை நீக்க 110 கோரிக்கைகளை மெட்டாவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் இணைய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

110 கோரிக்கைகளில், 106 உள்ளடக்கம் அதன் சமூக தரங்களை மீறுவதாகவும், அவை அகற்றப்பட்டதாகவும் பேஸ்புக் கண்டறிந்துள்ளது என்று அது கூறியது.

இந்த வழக்கு 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு பல்லுடக சட்டத்தின் பிரிவு 233 (1) (ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றம் சாட்டப்பட்டால் 500,000  ரிங்கிட் வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset