நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 கார்களை வழங்க காரோ ஒப்புக் கொண்டுள்ளது: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக பயன்பாட்டிற்காக 30  கார்களை வழங்க கார் விற்பனை நிறுவனமான காரோ ஒப்புக்கொண்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இதை கூறினார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தனது அமைச்சு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில்  வாகனம் தேவைப்படும் எந்தவொரு பாதிக்கப்பட்டவரும் சிலாங்கூ ர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எங் ஷீ ஹான் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

எத்தனை வாகனங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வாகனங்களைப் பெற மற்ற நிறுவனங்களையும் தொடர்பு கொள்கிறோம்.

புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தை ஆய்வு செய்த பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset