
செய்திகள் மலேசியா
2 ரோட்வீலர் நாய்களை கருணைக் கொலை செய்ய உரிமையாளர் ஒப்புக் கொண்டார்
கோலக் கெட்டில்:
2 ரோட்வீலர் நாய்களை கருணைக் கொலை செய்ய உரிமையாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கோலா கெட்டில், தாமன் டேசா பிடாராவில் நடந்த ஒரு சம்பவத்தில் 2 ரோட்வீலர் நாய்கள் ஐந்து நபர்களைத் தாக்கி கடித்தது.
இந்த இரண்டு ரோட்வீலர் நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் செல்லப் பிராணிகளை தூங்க வைத்து கருணைக் கொலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நாய் உரிமையாளருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையே இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட உரிமையாளர் இம்முடிவுக்கு ஒப்புதல் வழங்கியதாக பாலிங் மாவட்ட மன்ற அதிகாரி யஸ்லான் சுனார்டி தெரிவித்தார்.
இரண்டு நாய்களும் பாலிங் கால்நடை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, தூங்க வைத்து கருணைக் கொலை செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தவிர, உரிமம் இல்லாமல் நாய்களை வைத்திருந்த குற்றத்திற்காக பாலிங் மாவட்ட மன்றம் உரிமையாளருக்கு இரண்டு சம்மன்களை வழங்கியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
April 3, 2025, 4:35 pm
கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்: மன்சோர் ஜக்காரியா
April 3, 2025, 4:33 pm
தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
April 3, 2025, 4:32 pm