
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்க அரசு செய்தித் தொடர்பாளரை நியமிக்க வேண்டும்: டத்தோஶ்ரீ ஹம்சா
சுபாங்ஜெயா:
எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்க அரசு ஒரு செய்தித் தொடர்பாளரை நியமிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து விரிவான அறிக்கையை வழங்க ஒரு செய்தித் தொடர்பாளரை நியமிக்கப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக சற்று மாறுபட்ட அறிக்கைகள் பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடும்.
தீ விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்த குற்றச்சாட்டுகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
பேரிடரை எதிர்கொள்பவர்களை தொந்தரவு செய்யும் எந்த உணர்வுகளும் இல்லாதபடி, இதை செய்ய வேண்டும்.
நேற்று நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
April 3, 2025, 4:35 pm
கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்: மன்சோர் ஜக்காரியா
April 3, 2025, 4:33 pm
தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
April 3, 2025, 4:32 pm