நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் படிப்படியாக வீடு திரும்ப அனுமதி

சுபாங் ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் படிப்படியாக வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹுசுனுல் கைடில் இதனை தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் கவனமாக மேற்கொள்ளப்படுகிறது.

சேதமடையாத அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்தில் உள்ள வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

நாங்கள் படிப்படியாக குடியிருப்பாளர்களை  வீடுகளுக்கு செல்ல அனுமதித்து வருகிறோம்.

அப்பகுதியில் பாதுகாப்பு இன்னும் ஒரு கவலையாக இருப்பதால் மக்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இன்று காலை வீடு திரும்பும் செயல்முறையின் முதல் கட்டமாக ஜாலான் புத்ரா ஹார்மோனி 1/3ஏ,  1/3பி இல் உள்ள 41 குடியிருப்புகள் இடம்பெற்றன.

குடியிருப்பாளர்கள் வீடு திரும்பியதும் மற்றவர்கள் அனுமதி கொடுப்பதற்கு  காட்டுவதற்கு முன்பு அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் நிலைமையை மதிப்பாய்வு செய்யப்படும்.

இன்று 115 குடும்பங்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்புவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset