நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரில் தங்கியிருந்த மாதுக்கு உதவவில்லை என்பது பொய்யான தகவல்களாகும்: செந்தோசா சட்டமன்ற மக்கள் சேவை மையத்தினர் விளக்கம்

செந்தோசா:

செந்தோசாவில் காரில் தங்கியிருந்த மாதுக்கு உதவவில்லை என்பது  பொய்யான தகவல்களாகும்.

இந்த பொய் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினரிம் மக்கள் சேவை மையத்தினர் விளக்கமளித்தனர்.

கிள்ளான் செந்தோசாவில் காரில் தங்கிருந்த மாதுக்கு மக்கள் சேவை மையம் உதவவில்லை என்ற செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டது.

இச்செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. ஆனால் இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை.

காரணம் மக்கள் சேவை மையத்திற்கு யார் வந்தாலும் அவர்களின் பெயர் முறையாக பதிவு செய்யப்படும். அப்படி ஏதும் பதிவுப் செய்யப்படவில்லை. 

மேலும் அம்மாது காரில் தங்கியிருந்த இடத்திற்கு  சென்ற போது அங்கு அவர்கள் இல்லை.

இந்நிலையில் மற்றொரு வீடியோவில் அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு விட்டது என செய்தி வருகிறது.

ஆக இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு சதியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இதன் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட ஊடகம் மீது போலிஸ் புகார் செய்யப்பட்டது.

இப்புகாருக்கு போலிஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தோசா  இந்திய சமூகத் தலைவர் தென்னரசு இதனை கூறினார்.

குணராஜ் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரானதில் இருந்து இந்த மக்கள் சேவை மையம் முறையாக செயல்பட்டு வருகிறது.

காலை முதல் மாலை வரை இச்சேவை மையம் திறந்திருக்கும் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.

ஆனால் சேவை மையத்திற்கே வராத ஒது மாது உதவி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதில் எந்தவொரு நியாமும் இல்லை.

அதே வேளையில் அம்மாதுவை அவரின் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்ப் படம் போல் அடுத்தடுத்து வீடியோ வருகிறது.

இதன் அடிப்படை செந்தோசா சட்டமன்ற மக்கள் சேவை மையம், சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்க்கு எதிரான  நடவடிக்கையாகவே இதை நாங்கள் பார்கிறோம்.

ஆக இதற்கு உரிய நடவடிக்கை தேவை என்று கிள்ளாள் மாநகர் மன்ற கௌன்சிலர் தங்கராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset