நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும்:  இயோ பீ யின்

பூச்சோங்:

புத்ரா ஹைட்ஸில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் கோல சுங்கை பாரு மற்றும் கம்போங் தெங்கா குடியிருப்பாளர்களுக்கு 1000 ரிங்கிட்டை வழங்குகிறது என்று பூச்சோங்  
நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் கூறினார்.

தனது தொகுதியிலுள்ள இவ்விரு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களுக்குக் குறிப்பாக இந்த விபத்தில் வீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதியுதவி இன்று தொடங்கி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

இன்னும் தங்கள் குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ளவர்களுக்கு உதவிகள் பின்னர் பகிர்ந்தளிக்கப்படும். 

இதர பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரப்பூர்வ தரவுகள் கிடைத்தவுடன் உதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.

உடனடி உதவித் தேவைப்படும் தனது தொகுதியைச் சேர்ந்த மக்கள் கம்போங் பத்து 13 மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்குழு தலைவரை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொகுதி அலுவலகம் 10,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset