நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர் பொது தற்காப்புப் படை இயக்குநர் கசாலி அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 427 ஆக இருந்தது.

இன்று காலை அந்த எண்ணிக்கை 536ஆக அதிகரித்துள்ளது.

புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் உள்ள மையத்தில்  119 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழக பல்நோக்கு மண்டபம், கோம்பாக் செத்தியா நலச் சங்க மண்டபத்தில் மேலும் இரண்டு மையங்கள் திறந்துள்ளது.

குறிப்பாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு மற்றொரு இம்மையம் திறப்பு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset