நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி

ஷா ஆலம்:

புத்ரா ஹைட்ஸில் நேற்று  எரிவாயு குழாயில் ஏற்பட்ட  தீ விபத்து சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை 72 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளிவரும்  அனைத்துத் தகவல்களையும் புறக்கணிக்காமல் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் முழுமையான விசாரணையை மேற்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். 

இச்சம்பவம் தொடர்பில் நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை உறுதிப்படுத்தாமல் யூகங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேம்பாட்டாளர்கள், ஊராட்சி மன்ற  அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.

காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தட்டும். சம்பவத்திற்கான காரணம்  72 மணி நேரத்திற்குள்  கண்டறியப்படும் சாத்தியம் உள்ளது. தங்கள்  பொறுப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று தாம் உத்தரவாதம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பல்நோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset