நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை 

சுபாங் ஜெயா: 

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாயில் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் நில வேலைகளுக்கு பொறுப்பான குத்தகையாளருக்கு முறையான அனுமதி உள்ளதா என்பதை காவல்துறையினர் விசாரித்து வருவதாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும், நில வேலைகள் தீ விபத்துக்கு காரணமா என்பதும் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

விசாரணைகளில் உதவ  குத்தகையாளர் அழைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

விசாரணை முடியாத நிலையில் எதையும் தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset