நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் ஆராயப்படும்: ங்கா கோர் மிங்

சுபாங் ஜெயா:

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் ஆராயப்படும்.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.

சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸில் நேற்று ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உதவுவதற்கு பொருத்தமான,  பயனுள்ள வழிமுறைகளை ஆய்வு செய்வதில் அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

சம்பவத்தின் விளைவாக இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மத்திய அரசு, சிலாங்கூர் அரசு, பெட்ரோனாஸ் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பரிந்துரையையும் அமைச்சு வரவேற்பதாக அவர் கூறினார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்க அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க அமைச்சு தயாராக இருப்பதாக ங்கா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset