நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது

சாகிங்:

மியான்மாரின் சாகிங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மலேசிய சிறப்பு தேடல், மீட்புக் குழு நான்கு உடல்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

நேற்று இரண்டு பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஆண்,  ஒரு பெண் மீட்கப்பட்டதாக அறிவித்தது.

அதே நேரத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி நிலவரப்படி, மேலும் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மீட்புக் குழுக்களுடன் இணைந்து தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வெப்பமான வானிலை குழுக்களைப் பாதிக்கிறது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பொறுப்பு முன்னுரிமையாகவே உள்ளது என்று நட்மா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset