
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து 20 நிறுவனங்கள் விசாரணையைத் தொடங்கின
சுபாங்ஜெயா:
சுபாங் ஜெயா ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 20 நிறுவனங்கள் இன்று காலை விசாரணை, பாதுகாப்பு ஆய்வுகளைத் தொடங்கின.
அவற்றில் போலிஸ்படை, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை , தெனாகா நேஷனல் பெர்ஹாட், பொதுப்பணித் துறை, உள்ளூர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட அலுவலகங்கள் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக ஜாலான் பெர்சியாரன் ஹார்மோனி இதுவரை கட்டம் கட்டமாக மூடப்பட்டுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு படிப்படியாக திறக்கப்படும் என்று சுபாங் ஜெயா போலிஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் விசாரணைகள், எடுக்கப்பட வேண்டிய பின் தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் ஒரு விளக்கம் நடத்தப்படும்.
சுபாங் ஜெயாவில் உள்ள சம்பவக் கட்டுப்பாட்டு நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
இதனிடையே எரிவாயு குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகள். வாகனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மதிப்பிடுவது உட்பட பல முக்கிய பணி நடவடிக்கைகளை தனது துறை தொடங்கியுள்ளது.
தீ விபத்து போன்ற எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க ஒரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 1:26 pm
சட்டவிரோத ஆலயம் தொடர்பான முகநூல் குழு நிர்வாகிகளிடம் எம்சிஎம்சி வாக்குமூலம் பதிவு செய்தது
April 3, 2025, 11:21 am
2 ரோட்வீலர் நாய்களை கருணைக் கொலை செய்ய உரிமையாளர் ஒப்புக் கொண்டார்
April 3, 2025, 11:18 am
புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் படிப்படியாக வீடு திரும்ப அனுமதி
April 3, 2025, 11:15 am
எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்தில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை - போலிசார்
April 3, 2025, 10:46 am