நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் மாமன்னர் தம்பதியர் கலந்து கொண்டனர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஷரித் சோபியா ஆகியோர் கூட்டரசுப் பிரதேச  பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் சுன்னத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் மாமன்னருடன் உடனிருந்தனர்.

கூட்டரசு பிரதேச முப்தி லுக்மான் அப்துல்லா தலைமையில் ஈத் அல்-பித்ர் தொழுகை நடைபெற்றது.

கடந்த 2024ஆம் ஆண்டு 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவியேற்ற பிறகு, சுல்தான் இப்ராஹிம் கூட்டரசுப் பிரதேச  பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் சுன்னத் தொழுகையை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset