நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமிய சமய மத போதகர் ஜம்ரி வினோத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பு காவல்

கங்கார்:

கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று முதல் இஸ்லாமிய சமய போதகர் ஜம்ரி வினோத்தை இரண்டு நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

சமூக ஊடக தளமான முகநூலில் மதத்தை அவமதித்ததாகவும், பொது ஒழுங்கை அச்சுறுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் உதவுவதற்காக இந்த தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

41 வயதான ஜம்ரி வினோத், தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1),  தகவல் தொடர்புச் சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருதீன் ஹுசைன் நேற்று கூறியிருந்தார்.

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பெர்லிஸில் உள்ள கங்கார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமட் நோர் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடமாற்றம் செய்வது தொடர்பில் முகநூலில் இனவெறி கருத்து பதிவிட்டது தொடர்பில் பெர்லிஸின் கங்காரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜம்ரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset