
செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
புத்ராஜெயா:
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்தவொரு தனிநபரையும் தனது ஆலோசகராக நியமித்ததில்லை.
இந்த விஷயத்தை அவரது செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹக்கிம் உறுதிப்படுத்தினார்.
மனிதவள அமைச்சரின் ஆலோசகராக ஒரு தனிநபர் இருப்பதாகக் கூறும் அறிக்கையை அமைச்சு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.
அமைச்சர் அலுவலகம் அல்லது மனிதவள அமைச்சகத்தில் உள்ள பதவிகள் குறித்த ஏதேனும் கேள்விகள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களுக்கு அனுப்பப்படலாம்.
பொதுமக்களிடம் 10 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக நம்பப்படும் டான்ஸ்ரீ என்ற பட்டப் பெயரைக் கொண்ட ஒரு தொழிலதிபர், மனிதவள அமைச்சரின் ஆலோசகராக இருப்பதாகக் கூறும் செய்தியைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 29 அன்று போலிஸ்படை எண்ணெய், எரிவாயு துறையில் 30 வருட அனுபவமுள்ள ஒரு தொழிலதிபரை கைது செய்தது.
அவர் பணமோசடி வழக்கைத் தீர்ப்பதற்காக போலிசாரிடம் ஒப்படைப்பதாகக் கூறி பணத்தை மோசடி செய்ததாக அறிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm