நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைத்து சமூகங்களிடையே வலுவான ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைத்திருக்க செய்ய வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நோன்பு பெருநாள் வாழ்த்து 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் வெவ்வேறு இனங்கள், சமயங்கள் ஒன்றாக வாழும் நாடாக விளங்குகிறது. இதில் முஸ்லிம் மக்கள் அனைத்து சமூகங்களிடையே வலுவான ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். 

ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது, இரக்க குணம், மற்றும் மனித நேயத்தை மேம்படுத்தும் கடப்பாடு ஆகியவை இல்லாமல் மலேசியா நிலையான, அமைதியான நாடாக வலம் வர முடியாது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார் 

இவ்வாண்டு கொண்டாடப்படும் ஹரி ராயா பெருநாளானது ஒற்றுமையையும் நன்நெறி கொள்கைகளையும் கொண்டு சேர்க்கும் வல்லமையை கொண்டிருக்க வேண்டும். இதனால் பொறுப்புணர்வு மிக்க தனிநபரை நாம் உருவாக்கிட முடியும் 

முன்னதாக, தொலைக்காட்சி நேரலையில் 2025 நோன்பு பெருநாள் சிறப்பு வாழ்த்து செய்தியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset