நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை கூறினார்.

அனைத்து முஸ்லிம்களுக்கும்  எனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சியாவல் மாதம் நமது சமூகத்தில் ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை மூலம் மட்டுமே நாம் ஒன்றாக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

ஆகையால் நமது தேசத்தின் நல்வாழ்வுக்காக சேவை செய்பவர்களின் தியாகங்களையும், அவர்களின் குடும்பங்கள்,  சமூகங்களுக்காக அயராது உழைப்பவர்களின் தியாகங்களையும் பாராட்டுவதற்கான ஒரு நேரம் இந்த நோன்பு பெருநாளாகும்.

அவர்களின் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை, நமது நன்றியுணர்வுக்கு தகுதியானவை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset