நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் ஒற்றுமையும் சமூக நல்லிணக்கத்தையும் மலேசியர்கள் தொடர்ந்து காக்க வேண்டும்: பேரரசர் தம்பதியர் நோன்பு பெருநாள் வாழ்த்து 

கோலாலம்பூர்; 

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா தம்பதியர் மலேசிய வாழ் முஸ்லிம் பெருமக்களுக்கு இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளனர் 

மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணி காக்க வேண்டும் 

ருக்குன் நெகாரா கோட்பாடு அடிப்படையில் மலேசியர்கள் இனம், மதம், சமயம் என்று பாராமல் ஒற்றுமையை மேலோங்க செய்வதே உறுதியான, வளமான மற்றும் நிலைத்தன்மையான மலேசியாவையும் மலேசியர்களையும் உருவாக்க முடியும் என்று சுல்தான் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார் 

ஒருமைப்பாடு என்பது வெறும் மேம்போக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஆழமான புரிதலை கொண்டு மலேசியர்கள் என்ற உணர்வை விதைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

ஷவ்வால் மாதத்தை வரவேற்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துகளுடன் கூடிய போஸ்டர் ஒன்றை சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது முகநூல் பதிவில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset