நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம்: டத்தோ சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் 

கோலாலம்பூர்:

புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள்  நல்வாழ்த்துகள். 

குடும்பத்தோடும், உற்றார் உறவினரோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியாய் கொண்டாட மனதார வாழ்த்துகிறேன்.

நோன்பு என்பது விரதம் மட்டுமல்ல. இந்த மாதத்தில் தான தர்மங்களும் அதிகம் வலியுறுத்தப் படுகின்றன. 

ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் மனிதத்தன்மையோடு நாம் பார்க்க வேண்டும். நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.

நோன்பு பெருநாளில் தீயவைகளைக் கைவிட்டு, ஒற்றுமை நல்லிணக்கம், பரிவு, பண்பு,  போன்ற நல்ல குணங்களை விதைப்போம். 

பல இனங்கள் வாழும் இந்த மலேசிய நாட்டில் ஒற்றுமை அடிப்படையான ஒன்று. காட்டை அழித்து நாடாக்கியது முதல், இன்று வானுயரக் கட்டடங்களும், பொருளாதார மேம்பாடும், சுபீட்சமான வாழ்க்கையும், அனைத்து மலேசியர்களாலும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இனத்திற்கும் இதில் பங்குண்டு. 

இதை உணர்ந்ததாலேயே நாம் புரிந்துணர்வோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிறோம்.  இது தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.

முஸ்லீம் நண்பர்களுக்கு மீண்டும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள். வாருங்கள் இணைந்து கொண்டாடுவோம்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset