நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்

புத்ராஜெயா:

பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் நேற்று மாலை தொலைபேசியில் பேசினேன்.

இந்த உரையாடலில் முஸ்லிம்கள் நோன்பு பெருநாள் கொண்டாடும் வேளையில், பாலஸ்தீனத்தில் வன்முறை இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த  மார்ச் 18 முதல் நடந்த தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, திட்டமிட்ட அமைதி முயற்சிகளை முறியடித்துள்ளன.

இந்த வன்முறையை நிறுத்துவதற்கான பிற திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டியதன் அவசரத் தேவையை நான் வலியுறுத்துகிறேன்.

மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதரர்களுடன் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்பதற்கான தனது உறுதியான நிலைப்பாட்டை எர்டோகன் மீண்டும் வலியுறுத்தினார் என்று பிரதமர் தனது முகநூலில் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset