நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களின் இன ஒற்றுமை தான் நமது பலம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:
மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

இந்நாட்டில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். 

இதனை ஒரு போதும் கைவிடாமல் ஒன்றாக கைகள் கோர்த்து, நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற அடிப்படையில் நோன்பு பெருநாள் கொண்டாடுவோம்.

நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள போதிலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை சீர்குழையவில்லை என்பதுதான் உண்மை. 

இந்த சூழ்நிலையை ஒரு சில தரப்பினர் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாலும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வலுவாக இருப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அனைவரும் மலேசியர்கள். மலேசியாவில் மட்டுமே பல்லீன மக்கள் வாழ்வதை காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தொண்டு  ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். 

கடந்த காலங்களில் தோட்டப்புறங்களில் பல  இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அந்த நிலை தொடர்ந்து நிலைபெற்று வருகிறது.

மலேசியாவில் வாழ்கின்ற பல்லீன சமுதாய மக்கள் அனைவரும் விருந்துபசரிப்பு நடத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.

பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத்  திருநாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நோன்பு பெருநாள் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset