
செய்திகள் மலேசியா
சாக்ஸ், ஆலயம், போயிங் என அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பாசாங்குத்தனம்: சைட் இப்ராஹிம் சாடல்
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவர்களின் கோழைத்தனமான அணுகுமுறையை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்ளூர் பிரச்சினைகளான சாக்ஸ், ஆலயம் போன்றவற்றில் கோபத்தை வெளிப்படுத்தி, அமெரிக்காவுடன் வர்த்தகத்தைத் தொடரத் தயாராக இருக்கும் அவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீனியர்களுடன் ஒரு ஒற்றுமை பேரணியை அமானா தலைவர் முகமது சாபு நடத்த திட்டமிடப்பட்டிருந்ததற்கு அவர் இவ்வாறு கூறினார்.
நமது முஸ்லிம் தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்த விரும்புகிறார்கள். இதன் வாயிலாக நமது முஸ்லிம் தலைவர்களின் கோழைத்தனத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி, சாக்ஸ், ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்த நாட்டில் சிறுபான்மை குழுக்களை அவர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள், தாக்குகிறார்கள்.
ஆனால் அவர்கள் இந்த நூற்றாண்டின் மிக மோசமான படுகொலைகளுக்குத் தாயான அமெரிக்காவிலிருந்து 30 போயிங் விமானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கினார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am
மலேசியர்களின் இன ஒற்றுமை தான் நமது பலம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 31, 2025, 11:41 am
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்: டத்தோ சரவணக்குமார்
March 31, 2025, 11:40 am
வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம்: டத்தோ சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்
March 31, 2025, 11:39 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 30, 2025, 8:04 pm