நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா சார்பில் ஹாங்காங் அறிவியல் போட்டியில் சிறப்பான வெற்றி – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெருமை!

ரவாங்:

ஹாங்காங்கில் நடைபெற்ற உலகளாவிய இளம் ஆய்வாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில், சஞ்சனா ஜெகதீஸ்வரன் மற்றும் லக்ஷன் சண்முகநாதன் தங்கப் பதக்கம் வென்று பெரும் சாதனை படைத்துள்ளனர்.

மலேசியாவைப் பிரதிநிதித்த மார்ச் 13, 2025 முதல் மார்ச் 16, 2025 வரை நடந்த இப்போட்டியில், இந்த இருவரும் ஹாங்காங் சிறப்பு விருது மற்றும் 800 ஹாங்காங் டாலர் ஆகியவற்றைப் பரிசாக பெற்றுள்ளனர்.

அவர்களின் வெற்றி பெற்ற புத்தாக்க கண்டுபிடிப்பு “2-in-1 இலை உரம் மற்றும் பூச்சி விரட்டி”, உலகளாவிய அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது, மலேசியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தும் ஒரு முக்கியமான சாதனை எனக் கருதப்படுகிறது.

100க்கும் மேற்பட்ட அணிகள்

இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து 100-ற்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்துகொண்டன. இதில், மலேசியாவை பிரதிநிதித்த ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளியின் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் சஞ்சனா ஜெகதீஸ்வரன் மற்றும் லக்ஷன் சண்முகநாதன் ஆகியோரின் வெற்றி, அனைத்து நிலைகளிலும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு நன்றி: பெற்றோர் நெகிழ்ச்சி

இந்தச் சாதனையைப் பொறுத்து, “இளம் ஆய்வாளர்” (Young Scientists) நிறுவனர் சண்முகநாதனுக்கும், ஆசிரியர்கள் லீலா, சங்கீதா (சீனார் நீலம் பாலர் பள்ளி) மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இளம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்திற்கும் திறமைக்கும் உறுதுணையாக இருந்து, அவர்களை ஊக்குவித்து, வழிகாட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இந்த வெற்றி மலேசியா மட்டுமின்றி, அனைத்து தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சாதனை!

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset