நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண் அரிப்பு, கடலால் விழுங்கப்பட்ட தாத்தாவின் அரண்மனை: பகாங் சுல்தான் வருத்தம்

குவாந்தான்:

மண் அரிப்பு, கடலால் விழுங்கப்பட்ட தாத்தாவின் அரண்மனையை கண்டு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் வருத்தமடைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பெக்கானில் உள்ள ஜாலான் பெக்கான் - நெனாசி வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும், பழைய நினைவுகளை நினைவு கூர்வது எனக்கு வருத்தமாக உள்ளது.

ஏனென்றால் இங்கே என் மறைந்த தாத்தாவுக்குச் சொந்தமான பத்து 16 அரண்மனை இருந்தது.

ஆனால் இப்போது அது மண் அரிப்பு,  கடலில் மூழ்கியதால் அந்த அரண்மனை மறைந்து விட்டது.

1970களில், குதிரை சவாரி செய்வதற்காக அவர் அடிக்கடி அரண்மனைக்கு  சென்று வருவேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான அரிப்பு காரணமாக அவரது பொழுதுபோக்குப் பகுதியாகச் செயல்பட்ட நிலமும் அரண்மனையும் இழந்ததாகவும் அவர் கூறினார்.

ஜாலான் பெக்கான் - நெனாசியின் பத்து 16 இல் உள்ள எனது மறைந்த தாத்தாவின் நிலமும் அரண்மனையும் 1980களில் காணாமல் போயின.

நான் குதிரை சவாரி செய்து அங்கு சென்றது வருத்தமாக இருக்கிறது.

இப்போது எஞ்சியிருப்பது நினைவுகள் மட்டுமே, கடந்த காலத்தில் நடந்த அரிப்பு இப்போது வரை தொடர்கிறது, இதனால் அங்குள்ள பிரதான சாலை கடலுக்கு அருகில் சென்று, எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset