
செய்திகள் மலேசியா
நான்கு வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மரணம்
குளுவாங:
நான்கு வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மரணமடைந்தனர்.
இவ்விபத்து பிளஸ் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய 58.1 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்தது.
ஒரு டிரெய்லர் உட்பட நான்கு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.
இவ்விபத்தில் கணவன், மனைவி, அவர்களது இரண்டு வயது மகள் உட்பட ஐந்து பேர் மரணமடைந்தனர்.
ஹோண்டா காரில் பயணம் செய்த ஒன்பது, ஏழு, நான்கு வயதுடைய மற்ற மூன்று குழந்தைகள் பலத்த காயமடைந்ததாக குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் பஹ்ரின் முகமட் நோ இதனை கூறினார்.
விபத்தில் புரோட்டான் எக்ஸ்50 காரின் ஓட்டுநர், அதன் முன்பக்க பயணியும் மரணமடைந்தனர்.
அவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
விசாரணைகளின் அடிப்படையில், 35 வயதான டிரெய்லர் ஓட்டுநர் ஜொகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போது லோரியின் முன் வலது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தால் இவ்விபத்து நிகழ்ந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am
மலேசியர்களின் இன ஒற்றுமை தான் நமது பலம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 31, 2025, 11:41 am
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்: டத்தோ சரவணக்குமார்
March 31, 2025, 11:40 am
வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம்: டத்தோ சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்
March 31, 2025, 11:39 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 30, 2025, 8:04 pm