
செய்திகள் மலேசியா
லபுவான் திருமுருகன் ஆலய ஏற்பாட்டில் ‘ஸ்ரீ வள்ளி’ நூல் வெளியீட்டு விழா
லபுவான்:
மார்ச் 27, 28-ஆம் ஆகிய இரு தினங்களில் லபுவான் திருமுருகன் ஆலயத்தில் 48 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு கந்த சஷ்டி பாராயணம் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அம்மையார் ‘ஸ்ரீ வள்ளி’ எனப்படும் திருமதி லதா ராமராஜ் அவர்கள் தொகுத்தருளிய கந்த சஷ்டி பாராயணம் விளக்கவுரை வெளியீடு மலேசிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
இதற்கு முன்பு மலேசியாவில் இதுபோன்ற பக்தி நூல் விளக்கவுரை நூல் வெளியீடு செய்திருந்தாலும் இந்நூல் ஆய்வு நூலாக இல்லாமல் இறையருள் அம்மையாரின் மனதுக்கு உணர்த்தப்பட்டதால் அவர் கந்தசஷ்டி நூலிற்கு பொருள் எழுதி அதை வெளியிட்டு முருகப்பெருமானின் மகிமை மற்றும் பேராற்றலை கூறவுள்ளார்.
அதிலும் லபுவான் தீவில் இது போன்ற நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.
லபுவான் திருமுருகன் ஆலயம் கடந்த 9 பிப்ரவரி 2025 அன்று பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக கும்பாபிஷேகம் கண்டது.
அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று வருவதோடு 28 மார்ச் அன்று முருகப் பெருமானின் திருவருளால் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெற நல்ல முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு லதா அம்மையார் அவர்கள் கந்த சஷ்டி பாராயணம் செய்வார்கள்.
மறுநாள் பூர்த்தி விழாவினை முன்னிட்டு கந்த சஷ்டி பாடல் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
முருக பக்தர்கள் முறையாக கந்த சஷ்டி பாராயணம் செய்து அதன் பொருளையும் உய்த்து உணர இது ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் லதா அம்மையார் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஆலயத் தலைவர் திரு சுப்ரமணியம் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவினை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருகிறார்.
முருகப்பெருமானின் கந்தசஷ்டி அதன் வரிகளில் மறைந்திருக்கும் மெய்ப்பொருள் விளக்கத்தினை தன்னுள்ளே கொண்டுள்ளது.
இதுவரை வெளிப்படாதா வேறுபட்ட கோணத்தில் இந்த அறிய பொக்கிஷம் வண்ணமயில் கொண்டுள்ள வண்ணங்களைப் போன்று பலவிதமான அனுவங்களை கொண்டுள்ள நமது வாழ்வினை மனநிறைவோடு கடக்கும் பக்குவத்தினை நமக்கு அருள்வதோடு கர்ம வினைகளைக் போக்கி முக்தி நிலையினை அடைய வழி காட்டுகின்றது.
இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் பாலமாக விளங்கும் இந்த அறியநூல் அழகிய லபுவான் தீவில் குடிக்கொண்டுள்ள திருமுருகப் பெருமானின் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தில் நிறைவுவிழா அன்று வெளியிடப்படுவது குறித்து தாம் மகிழ்வதாகவும் லதா ராமராஜ் அவர்கள் தெரிவித்தார்.
இவ்வேளையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் கலந்துக்கொண்டு தொடர்ந்து நடைபெறும் கந்தசஷ்டி விளக்கவுரை நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கின்றார் அம்மையார் லதா ராமராஜ் அவர்கள்.
இந்நிகழ்வினைத் தொடந்து சிலாங்கூர் காஜாங் ஜாலான் ரேக்கோ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அம்மையார் அவர்களின் நூல் வெளியீடும் சொற்பொழிவும் இடம்பெறும். முருக பக்தர்கள் அனைவரும் தவறாது திரண்டு வந்து இந்த ஆன்மீக விழாவில் கலந்துக் கொண்டு திருமுருகப் பெருமானின் திருவருளைப் பெறவேண்டுமெனவும் லதா அம்மையார் கேட்டுக் கொண்டார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm