நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குப்பைகள் கொண்ட ஆடையுடன் ஃபேஷன் ஷோ: ரமலானில் உணவை  வீணடிக்காமல் இருக்க ஓர் விழிப்புணர்வு முயற்சியாகும்

கோலாலம்பூர்:

குப்பைகள் கொண்ட ஆடையுடன் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது ரமலானில் உணவை வீணடிக்காமல் இருக்க ஓர் விழிப்புணர்வு முயற்சியாகும்.

MYSaveFood பிரச்சாரத்தின் துணை இயக்குநர் ஜைனுல் அஸ்யாரா இதனை கூறினார்.

கடந்த மார்ச் 11 அன்று பந்தாய் டாலாம் ரமலான் சந்தையில் பஜாரில் நடைபெற்ற குப்பைகள் கொண்ட ஆடையுடன் ஃபேஷன் ஷோ பலரின் கவனத்தை ஈர்த்தது.

வழக்கமான ஃபேஷன் ஷோக்களிலிருந்து வேறுபட்டு அரசு சாரா இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிகரித்து வரும் உணவு வீணடிக்கும் சம்பவங்களை தவிர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இது விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு அதன் பாதிப்பை ற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்டது.

இந்த ஃபேஷன் ஷோ ரமலான் பசாரில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவுக் கழிவுகள், உபரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரமலான் சந்தையில் உணவு வீணாக்கப்படுவதன் விளைவாக வீணாகும் உணவை அல்லது உணவுக் கழிவு என்று எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்ன

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset