நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள கோயிலை வேறு இடத்திற்கு மாற்ற தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகம் சம்மதம் 

கோலாலம்பூர்: 

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள ஓர் இந்து கோயில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய அவ்வாலய நிர்வாகத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது 

கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL தரப்புடன் தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினர் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக ஆலயத்தின் நிர்வாக செயலாளர்  கார்த்திக் குணசீலன் கூறினார் 

இவ்வேளையில் இந்த விவகாரத்திற்குச் சுமூகமான முறையில் தீர்வு கண்ட அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற அமலாக்க துறை அதிகாரிகளுக்கும் தாங்கள் நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார் 

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியின் அருகே இந்த ஆலயம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.  அதுவே அக்கோயிலின் மாற்று இடமாக கருதப்படும் என்று அவர் சொனனர் 

முன்னதாக, பத்ரகாளியம்மன் ஆலயம் அரசாங்கத்தால் உடைபடவிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவித்தனர் 

கடந்த 2012ஆம் ஆண்டு ஜேக்கல் ட்ரேடிங் நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. பள்ளிவாசல் கட்டுவதற்கு 2021ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset