
செய்திகள் மலேசியா
அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் பினாங்கின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்: சாவ் கோன் இயோ
ஜார்ஜ் டவுன்:
பினாங்கு மாநில புதிய ஆளுநர் அம்மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று பினாங்கு மாநில அரசியலமைப்பில் எந்தக் கட்டாயமும் இல்லை என்று முதல்வர் சாவ் கோன் இயோ கூறினார்.
ஆளுநர் நியமனம் தனிநபரின் அந்தஸ்தின் அடிப்படையில் இருக்காது.
மாறாக, அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் ஆளுநர் நியமிக்கப்படும் என்று அவர் இன்று கோம்தாரில் உள்ள தனது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று, இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, பிரதமர் அலுவலகத்திற்கு பரிசீலனைக்காக ஆளுநர் வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பித்ததாகச் சாவ்கூறினார்.
பினாங்கு யாங் டி-பெர்டுவா நெகிரியின் நியமனம் யாங் டி-பெர்டுவா அகோங்கின் விருப்பப்படி உள்ளது, எனவே அவர் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am