நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளுக்கான டோல் கட்டணச் சேவைக்குக் கழிவு வழங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்:  அலெக்சாண்டர் நந்தா 

கோலாலம்பூர்: 

நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணச் சேவைக்குக் கழிவு வழங்குவது குறித்து அரசு விரைவில் முடிவு செய்யும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். 

சீனப் புத்தாண்டு காலத்தில் வழங்கப்பட்டது போல் நோன்பு பெருநாளுக்கும் டோல் கட்டணச் சேவைக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்ப வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல், பொது உள்கட்டமைப்பு திட்டங்களை முடிப்பதில் துரிதமாகச் செயல்படுத்துமாறு பொதுப்பணி துறை அமைச்சகத்தைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

முன்னதாக, டோல் கட்டணத்திற்கு இலவசச் சேவைக்கு அரசாங்கம் நெடுஞ்சாலை நிறுவனத்துற்கு நிதி வழங்குவதாகவும் அது சுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset