நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் கட்டுவது குறித்து பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தில் இன்று பொங்கல் விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆசிரமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே. அம்பிகைபாகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

விவேகானந்தா ஆசிரமத்தின் கீழ் உள்ள பள்ளிகளும் இந்த பொங்கல் விழாவில் பாராட்டுக்குரியது.

இந்நிலையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்தியர்களுக்கு என ஒரு பல்நோக்கு மண்டபம் இல்லாதது மிகப் பெரிய குறையாக இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் விவேகானந்தா ஆசிரமத்தை தொடர்ந்து பராமரிப்பதுடன் அதன் பின்புறத்தில் உள்ள மண்டபத்தை புதுப்பிக்கலாம் என்ற சிந்தனை பிறந்துள்ளது.

இம்மண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டால் அது இந்தியர்களின் அடையாளமாக இருக்கும்.

மேலும் ஆசிரமத்திற்கும் பள்ளிகளுக்கும் வருமானத்தை ஈட்டித் தரும்.

இத்திட்டம் குறித்து டான்ஸ்ரீ அம்பிகைபாகனுடன் இணைந்து பிரதமரின் சந்திப்பேன்.

காரணம் மடானி அரசாங்கத்தின் சார்பில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்து குறித்து பிரதமரிடம்  பேசப்பட்டது.

ஆக இந்த பல்நோக்கு மண்டபம் திட்டம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்.

இத்திட்டத்திற்கு பிரதமரின் முழு ஆதரவு  மீண்டும் கிடைக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset