நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது

மலாக்கா:

போலிசாக நடித்து 17 வயது இளம்பெண்ணை அச்சுறுத்திய 25 வயது ஆடவர் ஒருவர் மலாக்கா காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிய போது, யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஆண், தனது ஐடியை போலீசாராக அறிமுகப்படுத்தி பெண்ணின் அடையாள அட்டை கேட்டு, டிக்டாக் செயலியில் தன்னை பிந்தொடருமாறு கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்த சந்தேகநபர் அந்த இளம்பெண்ணிடம் அபராத பணத்தை செலுத்துமாறும், இல்லாவிட்டால் தனதுடன் உடலுறுவில் ஈடுபட வேண்டும் என்று ஆபாசமாக பேசி உள்ளார். 

அந்த , பெண் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506, பிரிவு 170 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று மலாக்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பட்டிட் கூறினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset