நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலயத்தை உடைக்கும் நோக்கம் ஜேக்கல் நிறுவனத்திற்கு இல்லை: டத்தோ சைட் நஸ்ருல் ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை உடைக்கும் நோக்கம் ஜேக்கல் நிறுவனத்திற்கு இல்லை.

அந்நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரி சைட் நஸ்ருல் ஃபஹ்மி இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆலயம் தற்காலிக அந்தஸ்தில் இருந்ததால் அந்த நிலத்தை ஜேக்கல் நிறுவனம் வாங்கியது.

அந்நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவது தான் இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

பொதுமக்களும் ஜேக்கல் நிறுவன பணியாளர்கள் பயன் பெறும் நோக்கில் இப்பள்ளிவாசல் கட்டப்படவிருந்து.

மாற்று நிலம் வழங்கப்பட்டு அவ்வாலயம் முறையாக மாற்றப்படும் என நாங்கள் நம்பினோம்.

ஆனால் ஆலயம் மாற்றப்படவில்லை. இதனால் ஜேக்கல் நிறுவனமே நேரடியாக ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இப்பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இதில் அந்த ஆலயத்தை அத்துமீறி உடைத்து பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை.

பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது. இது சட்டத்திற்கு எதிரானது என்றும் எங்களுக்கும் தெரியும்.

ஆகையால் இந்த விவகாரத்தை யாரும் இன ரீதியிலான சர்ச்சையாக வேண்டாம்.

குறிப்பாக தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset