நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார் 

கோத்தா கினாபாலு: 

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளன. 

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி, நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவரும் நேற்று தலைமையேற்ற கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக கூட்டாக அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தனர். 

அரசியல் ஒத்துழைப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் யாவும் சபா மாநில தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி ஒன்றாக மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. 

சபா மாநில தேர்தலில் கூட்டணி தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் தேசிய அளவில் உள்ள தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி தலைமையே முடிவு செய்யும் என்று  தெரிவித்தனர்,

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset