நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு விவகாரத்தில் சரவாக் மாநிலத்தின் சுயாட்சி அதிகார கோரிக்கை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டும்

கோலாலம்பூர்: 

எரிவாயு கனிமங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் சரவாக் மாநிலத்திற்கு சுயாட்சி அதிகார கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு இந்த விவகாரம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் கூறினார். 

கூட்டரசு சாசனத்தில் நாட்டின் கொள்கையே முன்னிலையாக இருக்க வேண்டும். பிறகு தான் மாநிலத்தின் கோரிக்கைகளை செவிசாய்க்க வேண்டும். 

மலேசியாவின் ஓர் அங்கமாக சரவாக் மாநிலம் இருப்பதால் அம்மாநிலம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது என்று மகாதீர் குறிப்பிட்டார். 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சரவாக் மாநிலம் ஏழை மாநிலமாக தானே இருந்தது என்று அவர் சாடினார். சரவாக் மாநிலத்திற்கு எரிவாயு  கனிமங்களைப் பெறுவதில் உரிமை இருந்தாலும் அது பெட்ரோனாஸ் நிறுவனத்தைப் பலவீனப்படுத்த கூடாது என்று முன்னாள் லங்காவி எம்.பி.யுமான துன் மகாதீர் சொன்னார். 

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset