நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் பார்த்திபன்

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ  பத்ரகாளியம்மன் ஆலயம் இதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்திபன் கூறினார்.

தேவி ஸ்ரீ  பத்ரகாளியம்மன் ஆலயம் 130 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும்.

இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

இந்நிலையில் இந்த நிலத்தில் பள்ளிவாசல் கட்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் ஆலயத்தை  வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆலயத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆலயத்தை உடைக்கக் கூடாது. ஆலயம் இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இது தான் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

இதன் அடிப்படையில் தான் கோலாலம்பூர் மாநகர் மன்ற மேயர் டத்தோஸ்ரீ மைமூனா இன்று ஆலயத்திற்கு வந்தார்.

ஆலயம் உடைக்கப்படாது. ஆலயம் வழக்கம் போல் செயல்படும்.

இவ்வாலத்திற்கு மாற்று இடம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் என அவர் கூறினார்.

எங்களை பொறுத்த வரையில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அனைத்து இனமும் அண்ணன் தம்பி போல் வாழ்ந்து வருகிறோம்.

பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்றால் அருகில் உள்ள நிலத்தில் அதை கட்டலாம். இது தான் இன ஒற்றுமையாகும்.

ஆகவே ஆல ய நிர்வாகத்தின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று  டாக்டர் பார்த்திபன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset