நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வாரின் தலையிட்டதால் பள்ளி கழிவறைகள் சிக்கல் தீர்ந்தது

ஈப்போ: 

பிரதமர் அன்வாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பள்ளி கழிப்பறைகள் சரி செய்யப்பட்டன என்று பிரதமரின் அரசியல் செயலாளரான முஹம்மத் காமில் அப்துல் முனிம் தெரிவித்தார். 

தற்போது லோங் ஜாஃப்பார் தேசிய பள்ளியிலுள்ள பழுதடைந்த கழிப்பறைகளை பழுதுபார்க்கும் பணிகள் இப்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.  

இப்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன,

மடானி அரசாங்கத்திடம் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறினால் அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர். 

பள்ளியில் சேதமடைந்த கழிப்பறைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டுத் தற்போது அவை பயன்படுத்த தயார் என்றும் முகமது காமில் அப்துல் முனிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு காணொலியின் வாயிலாகத் தெரிவித்தார்.   

முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கமுந்திங் ரமலான் சந்தைக்கு வந்திருந்த போது அவரிடம் தொடக்கப்பள்ளி மாணவர் தான் பயிலும் பள்ளியில் கழிப்பறைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதனைச் சரி செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset