நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தேசிய கூட்டணியிடம் தீர்வுகள் உள்ளன: முஹைதின் யாசின்

கோலாலம்பூர்:

வருமானப் பற்றாக்குறை,பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு  தேசிய கூட்டணியிடம் தீர்வுகள் உள்ளன என்று அதன் தலைவர்  முஹைதின் யாசின் தெரிவித்தார். 

முழுமையான தீர்வுகள் குறித்து அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. 

இருப்பினும், 16-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய கூட்டணியின் கீழ் செயல்படும் அரசு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உரியத் தீர்வை வழங்கும் என்றும் முஹைதின் தெரிவித்தார். 

வருமானம் அதிகரிக்கவில்லை. ஆனால் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

மார்ச் 9-ஆம் தேதி 16-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்காக கூட்டணிக்கான மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வதற்கான மூன்று செயல் திட்டங்களை முஹைதின் குறிப்பிட்டிருந்தார்.

பெர்சத்து தலைவர், பிஎன் உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருப்பதால் பலவீனமாகவோ அல்லது வருத்தமாகவோ உணர வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மறுபுறம், கூட்டணியின் வலிமையில் நம்பிக்கையுடன் இருக்கவும், எதிர்க்கட்சியாக தங்கள் பங்கை நிறைவேற்ற உறுதி பூண்டிருக்கவும் முகிதீன் அவர்களை வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset