நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார் 

கோலாலம்பூர்:

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் இடத்தை நிரப்ப டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை முதன்மை தேர்வாக உள்ளார்.

டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் இரண்டு ஆண்டுகள் தேசிய போலிசஸ்படைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.

அவரின் பதவிக் காலம் வரும் இந்த ஜூன் மாதத்துடன் ஒரு நிறைவுக்கு வருகிறது.

இதுவரை, அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா அல்லது அவரது இடத்தை அவரது துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பாரம்பரியமாக போலிஸ்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அயோப் கான் (வயது 59).  ரசாருடின் (வயது 62) விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்ப முக்கிய தேர்வாகக் கருதப்படுகிறார்.

எப்படியிருந்தாலும் இந்த ஜூன் மாதம் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், போலீஸ் படை ஆணையக் கூட்டத்தின் விளைவாக முன்மொழியப்பட்ட நபர்களை அங்கீகரிக்கும்போது, ​​இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்.

இதனிடையே புக்கிட் அமானில் உள்ள ஆறு துறை இயக்குநர்கள் இந்த ஆண்டு ஓய்வு பெறும்போது, போலிஸ்படை பெரிய அளவிலான தலைமை மாற்றத்தையும் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset