
செய்திகள் மலேசியா
பல்லைக்கழக மாணவியை கத்தியால் குத்திய ஆடவனுக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
சுங்கைப்பட்டாணி:
பல்கலைக்கழக மாணவியை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மதின்ம வயது ஆடவனுக்கு முதல் ஆறு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு வருகை தந்த சுங்கை பட்டாணி நீதிமன்ற நீதிபதி எம். கலைராசி இந்த தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
பாதிக்கப்பட்டவருடன் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சந்தேக நபர் இன்னும் போலிஸ் மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மருத்துவமனையில் தடுப்புக்காவல் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அவரது காதலி என்று கூறப்படுகிறது.
சந்தேக நபர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைமையக சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாரணையில் 19 வயது பாதிக்கப்பட்டவரின் உடலின் பின்புறம், கழுத்தின் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவரிடமிருந்தும், சம்பவ இடத்தில் இருந்த பல சாட்சிகளிடமிருந்தும் நாங்கள் பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்வோம்.
பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு பினாங்கின் பந்தர் பெர்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்திற்கு அவரது குடும்பத்தினரால் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm