நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து

புக்கிட் மெர்தாஜாம்:

வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  வலியுறுத்தினார்.

சமீப காலமாக அதிகரித்து வரும் தொற்றுநோயாகவும் தீவிரமானதாகவும் மாறி வரும் வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை ஒரு வாகனமாகப் பயன்படுத்த வேண்டாம்.

அதற்கு பதிலாக உம்மத்தை வளர்ப்பதிலும் பல்வேறு அறிவார்ந்த மத நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலம்,

குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு  பள்ளிவாசல்கள் ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிவாசல்களை செழிக்கச் செய்யுங்கள். படிப்பு வகுப்புகளை நடத்தி பெண்கள், இளைஞர்களுக்கான இடங்களை உருவாக்குங்கள்.

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு தாக்குதலுக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக முடிவுகளை எடுப்பதற்கு முன் புரிதலை வழங்குங்கள்.

அல் குர்ஆன், நபிகள் நாயகத்தின் அடிப்படையில் புரிதலை வழங்குங்கள்.

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜமேக் பெராய் மசூதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset