
செய்திகள் மலேசியா
அல்-குர்ஆனின் வழிகாட்டுதலின்படி வாழ்பவர்களால் மட்டுமே ரமலானில் ஆன்மிகத்தின் இனிமையை உணர முடியும்: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
புத்ரா ஜெயா:
இது அருள்மிக்க ஒரு நாள். இன்றுதான் ஹிரா குகையில் இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு முதல் வேத வெளிப்பாடு இறக்கப்பட்டது,
நுஸுல் அல்-குர்ஆனின் ஒரு முக்கியமான நிகழ்வை ஒன்றாக நினைவுகூரும் வாய்ப்பு நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஓதுவீராக என்ற திருக்குர்ஆனின் முதல் வசனம், அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சகாப்தத்தின் தொடக்கப் புள்ளி என்று பிரதமர் தனது நுஸுல் குர் ஆன் வாழ்த்து செய்தியில் கூறினார்.
இந்த புனிதமான மாதத்தில் இதயக் கண்களால் அல்-குர்ஆனைத் வாசிக்க முடிந்ததற்கு இறைவனுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரமலானின் நடுப்பகுதியில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவும் விரும்புகிறேன். ஆயிரம் நிலவுகளின் இரவான லைலத்துல் கதாரை சந்திக்க அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
.
185வது வசனத்தின் தொடக்கத்தில் சூரா அல்-பகராவில் அல்லாஹ்வின் வசனத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும் சத்தியத்தையும் சத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளபட்டது...
ரமலானில் அல்-குர்ஆனின் வழிகாட்டுதலின்படி வாழ்பவர்களால் மட்டுமே ஆன்மிகத்தின் இனிமையை உணர முடியும்.
இந்த அருமையான நுசுல் குர்ஆன் தினத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்ல செயல்களை ஏற்றுக்கொள்வானாக.
இவ்வாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது நுஸுல் குர்ஆன் செய்தியில் கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm