நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் மாபிம் பணியாளர்களுக்கு எதிரான மிருகத்தனத்தை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

கடந்த சனிக்கிழமை காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மலேசிய இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் எட்டு மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான கொலை மற்றும் கொடுமையை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

காசா, பாலஸ்தீனத்தில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வலுவான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மனிதாபிமானப் பணியில் ஈடுபடும், நோயாளிகளுக்கு உதவுதல் போன்ற மாபிம் தன்னார்வலர்களுக்கு எதிரான கொலை, கொடுமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜார்ஜ்டவுனுக்கு அருகிலுள்ள பினாங்கு மேம்பாட்டுக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பினாங்கு மாநில மேம்பாட்டு சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்,

தற்போது நடைபெற்று வரும் வன்முறைக்கு எதிராக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வலுவான எதிர்ப்பை வெளியிடுகிறது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று, வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் நடந்த தாக்குதலில் எட்டு பாலஸ்தீன அதிகாரிகள் தியாகிகளாகியதாக மாபிம் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset