
செய்திகள் மலேசியா
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
சிப்பாங்:
கிரிக்கெட் வீரர்கள் போல் மாறுவேடமிட்டு நாட்டிற்குள் நுழைய முயன்ற 15 வங்காளதேச ஆண்கள் குழு நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) கைது செய்யப்பட்டனர்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறையின் அறிக்கையின் படி, இந்தக் குழு சோதனைகளின் போது கிரிக்கெட் சீருடையை அணிந்து அதிகாரிகளை குருடாக்க முயன்றது.
மேலும் அந்த குழு நாட்டிலுள்ள ஒரு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போட்டி ஏற்பாட்டுக் கடிதத்தையும் சமர்ப்பித்ததாகவும், பின்னர் அது போலியானது என்று கண்டறியப்பட்டது.
அதே வேளையில் நாட்டில் குறிப்பிட்டபடி மார்ச் 21 முதல் மார்ச் 23 வரை எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறாது.
அந்தக் குழு உத்தரவாதமாக ஒரு ஆதரவாளரையும் பெறவும் முயன்றது. ஆனால் அங்கிருந்த நபர் கிரிக்கெட் போட்டி குறித்து எந்த தகவலும் இல்லை என்று ஒப்புக்கொண்டார்.
அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும்.
அவர்கள் கிரிக்கெட் வீரர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மலேசியாவிற்குள் வேறு நோக்கங்களுக்காக நுழைய முயற்சிக்கும் ஒரு கும்பலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் மேலும் விசாரணையில் கண்டறியப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm