
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
புத்ராஜெயா:
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அளித்த அறிக்கையின் பதிவு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சப்ரி இன்று கலந்து கொள்ள முடியாததால் நாளை அது தொடரவுள்ளது. ஆனால் அதற்கான காரணம் விளக்கப்படவில்லை.
நாளைக்கான நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை, என்று எம்ஏசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐந்தாவது முறையாக எம்ஏசிசியில் வாக்குமூலம் அளிக்க இஸ்மாயில் சப்ரி ஆஜராகவிருந்த நிலையில், அவரது முன்னேற்றங்களைக் கண்காணிக்க காலை 9 மணி முதலே ஊடகவியலாளர்கள் எம்ஏசிசிக்கு வெளியே முகாமிட்டனர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது அதிகாரிகள் சமீபத்திய தகவல் மற்றும் உளவுத்துறை கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இஸ்மாயில் சப்ரி மீதான விசாரணை தொடர்பாக பல புதிய கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டிய பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm